திருப்பத்தூர்: வாணியம்பாடியை அடுத்த வன்னியபுதூர் பகுதியில் இன்று எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்நிலையில், விழாவில் பங்கேற்ற காளை ஒன்று வழி தவறி, 4 கிலோ மீட்டர் தூரம் வாணியம்பாடியில் உள்ள சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடி வந்தது. அப்போது பெருமாள் கூட்டு சாலையில் அந்த காளை ஓடி வந்த போது, அந்தப் பகுதியில் நடந்து சென்ற பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகளான நாகராஜ் மற்றும் அவரது மனைவி மீது காளை மோதியது. இதில் பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப் பகுதி மக்கள் படுகாயமடைந்த தம்பதியினரை உடனடியாக அங்கிருந்து மீட்டு முதலுதவி அளித்து, இருவரையும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பார்வை மாற்றுத்திறனாளி தம்பதியினர் மீது காளை மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி்யை ஏற்படுத்தி வருகிறது.
Category
🗞
NewsTranscript
00:00This video is brought to you by S.T.A.L.D.