• 7 years ago
மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம்.
நவகிரங்களின் பெயர்ச்சி இயல்பானதுதான் என்றாலும் சனிப்பெயர்ச்சி அனைவராலும் அச்சத்தோடு கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார்.
தனுசு ராசியில் சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது.சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அட்டமத்தில் இருந்து 9வது இடமான பாக்யதானத்திற்கு செல்கிறார். இதுநாள் வரை சனிபகவான் தனது பகை கிரகமாக செவ்வாய் வீட்டில் இருந்தார். டிசம்பர் மாதம் முதல் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார். அட்டமத்து சனியால் அவமானப்பட்ட நீங்கள் இனி அல்லல்பட்ட நீங்கள் இனி நல்லது நடப்பதை காண்பீர்கள்.

நோய் தொந்தரவில் இருந்தவர்கள் இனி அதில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களை அனுபவித்த நீங்கள் இனி நல்லதை அனுபவிக்கப் போகிறீர்கள். அவமானங்களை பட்ட நீங்கள் அவை அனுபவங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். பாக்யசனி பல நன்மைகளை தருவார்கள்.

அட்டம சனியால் மந்தநிலையில் இருந்த மாணவர்கள், பாக்ய சனியால் சாதனை படைக்கப் போகும் காலமிது. இதுநாள் வரை தடைபட்டு இருந்த கல்வி 9 ஆம் இடத்து சனியால் விலகி உயர்கல்வி யோகம் கிடைக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல யோகம் கிடைக்கும். இனி இரண்டரை ஆண்டுகாலம் இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மாணவர்களே.

Recommended