• 6 years ago
அமெரிக்க பாப் பாடகி ஒய்ட்னி ஹூஸ்டன் மரணத்திற்கும், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இயற்கையான மரணமாக இருக்கலாம் என்ற போதிலும் கூட அவர் மரணமடைவதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்த நிலையில் பாப் பாடகி ஹூஸ்டனின் மரணத்திற்கும், ஸ்ரீதேவி மரணத்திற்கும் இடையே சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது. இருவரது மரணத்திலும் கூட சூழல்கள்தான் குழப்பமாக உள்ளது. அதாவது ஒய்ட்னி எப்படி பாத்டப்பில் மூழ்கினார் என்பது தெரியவில்லை. அதேபோலத்தான் ஸ்ரீதேவி மூழ்கியதிலும் குழப்பம் நிலவுகிறது.
ஸ்ரீதேவி மரணத்தின் காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. போதை நிரம்பி வழியும் அளவுக்கா அவர் மது அருந்தியிருப்பார் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Category

🗞
News

Recommended