TVS EuroGrip RoadHound Tyre Performance Test In TAMIL by Giri Kumar | இந்தியாவின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் யூரோகிரிப், சூப்பர் பைக்குகளுக்கான புதிய டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோடுஹாண்டு ஜீரோ டிகிரி ஸ்டீல் பெல்டட் டயர்கள் பிரத்யேகமாக சூப்பர் பைக்குகளுக்கு சிறப்பான கிரிப்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த டயர்கள், பைக்கிற்கு சிறப்பான கையாளுமை மற்றும் மைலேஜை வழங்குகின்றன. அத்துடன் இந்த ரோடுஹாண்டு டயர்கள் அதிக வேகத்தில் செல்லுபடியும் டிசைன் செய்யப்பட்டுள்ளன. இதில் சிலிக்கா இருப்பதால் வெட் கிரிப் கிடைக்கிறது. இதன் அட்வான்ஸ் திரெட், சிறப்பான ஸ்டெபிளிட்டி மற்றும் கண்ட்ரோலை வழங்குகிறது. இந்த ரோடுஹாண்டு டயர்கள், 120/70-ZR17, 160/60-ZR17 மற்றும் 180/55-ZR17 ஆகிய அளவுகளில் கிடைக்கின்றன. இந்த டிவிஎஸ் யூரோகிரிப் ரோடுஹாண்டு டயர்களை, கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே ரேஸ்டிராக்கில் வைத்து, பல்வேறு ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பொருத்தி, அதன் செயல்திறனை நாங்கள் சோதித்தோம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
#TVSEuroGrip #RoadHound #TVSEuroGripRoadHound #TVSEuroGripSuperBikeTyres #KariMotorSpeedway
~PR.156~
#TVSEuroGrip #RoadHound #TVSEuroGripRoadHound #TVSEuroGripSuperBikeTyres #KariMotorSpeedway
~PR.156~
Category
🚗
Motor