நாமக்கல் மாவட்டம் வெப்படையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி முன்பு செல்லும் நெடுஞ்சாலை முன்பு தொடர் விபத்துகள் நிகழ்ந்து வருவதால் வேகத்தடை அமைக்க கோரியும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பலமுறை கோரிக்கை பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சாலையை கடக்க நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Category
🗞
News