• 7 years ago
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி எல்லி அவ்ரமுக்கு துரோகம் செய்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்கள், பார்ட்டிகளுக்கு சென்றார்கள். இந்நிலையில் பாண்டியா வேறு ஒரு நடிகையை காதலிப்பதாக கூறப்படுகிறது. பாண்டியாவின் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராதேலா கலந்து கொண்டார். அவரும், பாண்டியாவும் நெருக்கம் காட்டியதை பார்த்தவர்கள் இது நட்பு அல்ல அதற்கும் மேல் என்று பேசத் துவங்கிவிட்டனர். பாண்டியா எல்லி அவ்ரமை ஏமாற்றுகிறாரா இல்லை அவர்கள் ஏற்கனவே பிரிந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில் எல்லி அவரம் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சல்மான் கானின் காதலி என்று கூறப்படும் நடிகை லூலியா வந்தூரும், எல்லி அவ்ரமும் தோழிகள். இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் சேர்ந்து சல்மானுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.


Cricketer Hardik Pandya is reportedly dating actress Urvashi Rutela. Is Hardik cheating on his girl friend Elli Avram or the duo has already broken up?

Category

🗞
News

Recommended