• 7 years ago
2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

2ஜி வழக்கில்: குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலை என தகவல் -ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலை -2ஜி: நீதிமன்றத்திற்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வந்துவிட்டார்களா? -வருகையை சரிபார்த்துக்கொண்டுள்ளார் நீதிபதி ஷைனி -2ஜி வழக்கில் காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஷைனி -2ஜி தீர்ப்பை எதிர்நோக்கி, கனிமொழி கணவர் அரவிந்தன் பாட்டியாலா நீதிமன்றம் வருகை -கனிமொழி தாயார் ராஜாத்தி அம்மாள், சகோதரர் அழகிரி ஆகியோரும் கோர்ட்டில் உள்ளனர் -2ஜி தீர்ப்பு வழங்க நீதிமன்றத்துக்கு வந்தார் நீதிபதி ஷைனி -டெல்லி நீதிமன்றத்துக்கு துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் வருகை -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் வெளியே சுமார் 1000 திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்

2ஜி தீர்ப்பை எதிர்நோக்கி பெரம்பலூரிலிருந்து அதிகப்படியான தொண்டர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர் -சிபிஐ நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமியை அனுமதிக்க கடும் எதிர்ப்பு -2ஜி வழக்கில் சில நிமிடங்களில் தீர்ப்பு: சிறப்பு அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் வந்தடைந்தார் -தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றம் -2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு டெல்லி போலீசார் நடவடிக்கை -2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதால் பாட்டியாலா நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு -கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி -வெளி நபர்களுக்கு கோர்ட்டுக்குள் அனுமதி மறுப்பு -டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழியுடன் ராஜாத்தி அம்மாளும் வருகை -சில நிமிடங்களில் 2ஜி தீர்ப்பு .. டெல்லி நீதிமன்றத்தில் குவிந்த ராஜா ஆதரவாளர்கள் -நீதிமன்றத்திலிருந்து ஆதரவாளர்கள் வெளியேற ராஜா உத்தரவு -காலை 10.30 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி தீர்ப்பளிக்க உள்ளார். -இன்னும் சிறிது நேரத்தில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வர உள்ளது -டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மு.க.அழகிரி -2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் கனிமொழியுடன் அழகிரியும் கோர்ட்டுக்கு வருகை -2ஜி வழக்கில் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்குகிறார் -2ஜி வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு - நீதிமன்றத்துக்கு புறப்பட்டார் ஆ ராசா -சுப்பிரமணிய சாமியும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு வருகை




A special court in Delhi is likely to pronounce the verdict in the 2G spectrum allocation case today. The fate of former telecom minister, A Raja and Kanimozhi, daughter of M Karunanidhi hangs in balance and the court would decide whether they are guilty or not.

Category

🗞
News

Recommended