• 3 years ago
அருள் புரிவாய் கருணைக் கடலே - ArulPurivai karunai kadalae

அருள் புரிவாய் கருணைக் கடலே!
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே !
பரிபூர்ண சதானந்த வாரியே !
பக்த ரக்ஷகனே! ,பரமாத்மனே !
அருள் புரிவாய் கருணைக் கடலே!
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே !
அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும்
அறிவும், உண்மை இன்பமும் தருவாய் !
தர்மப் பயிர் காக்கும் ,தருண மாமழையே !
தங்குயிர் எங்கணும் மங்களம் பொங்கவே !
அருள் புரிவாய் கருணைக் கடலே!
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே !

Category

🎵
Music

Recommended