Zum Player springenZum Hauptinhalt springenZur Fußzeile springen
  • 26.1.2021
Text
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
பூமி எங்கும் சுற்றி வந்தேன்
விண்ணை தொட்டும் வந்தேனே
இந்த மண்ணில் ஏதோ ஒன்று
வேற்று மொழி சொற்கள் எல்லாம்
கேட்டு கொண்டே வந்தேனே
என் தமிழில் ஏதோ ஒன்று
பிரிந்திடும் வரை
இதன் பெருமைகள் எதுவும்
அறிந்திடவில்லை நெஞ்சம்
மறுபடி பாதத்தினை
நான் பதிக்கும் பொழுது
சிலிர்க்குது தேகம் கொஞ்சம்
நரம்புகள் அனைத்திலும்
அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம்தான்
ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர்தான்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
Pizza, burger உண்டு வந்தேன்
Pasta தின்றும் வந்தேனே
இட்டிலியில் ஏதோ ஒன்று (ஏதோ ஒன்று)
Rock and roll கேட்டு வந்தேன்
Jazz மூழ்கி வந்தேனே
நம் பறையில் ஏதோ ஒன்று (ஏதோ ஒன்று...)
உறவுகள் என்னும் சொல்லின்
அர்த்தம் கண்டுபிடிக்க
வேறு இடம் மண்ணில் இல்லை
ஏ... மொழி வெறும் ஒலி இல்லை
வழி என்று உரைத்த
வேறு இனம் எங்கும் இல்லை
நரம்புகள் அனைத்திலும்
அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம்தான்
ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர்தான்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
Coat'u அதை கலட்டி விட்டு
Pant'u அதை கொளுத்திபுட்டு
வேட்டியை நீ மடிச்சுக்கட்டு
தகிட தகிட தகிட தகிட
சகதியில் கால விட்டு
நாத்து நட்டும் தாளம் இட்டு
எட்டு கட்ட பாட்டு கட்டு
தகிட தகிட தகிட தகிட
ஆயிரம் ஆண்டின் முன்னே
சித்தர் சொன்னதெல்லாமே
இன்றுதான் NASA சொல்லும்
நிலவை முத்தமிட்டு
விண்கலத்தில் ஏறி
தமிழோ விண்ணை தாண்டி வெல்லும்
கிழவிகள் மொழி
அனுபவ உளி
அதில் உண்டு பூமி பந்தின்
மொத்த அறிவு
குமரிகள் விழி
சிதறிடும் ஒளி
அதில் உண்டு பூமி பந்தின்
மொத்த அழகு
ஏழு கோடி இதயத்தில்
ஒரே துடிப்பு
எங்கள் விழிகளில் எரிவது
ஒரே நெருப்பு
உலகினில் ஒளி தர
அதை பரப்பு
இந்த இனத்தினில் பிறப்பதே
தனி சிறப்பு
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...

Kategorie

🎵
Musik

Empfohlen