Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
2 கி.மீ தூரம் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுக்க ஓடி சென்ற ஐதராபாத் டிராபிக் போலீஸ் பாப்ஜி வைரல் வீடியோ.காவல் துறையில் மனவுளைச்சல் மற்றும் உடல் உளைச்சல் மிகுந்த துறை சாலை பாதுகாப்பு துறையான டிராபிக் தான். பொதுவாகவே டிராபிக் போலீசார் சொல்வதை மக்கள் பெரிதாக கேட்கமாட்டார்கள். போலீஸ் ஓரமாக நிற்கிறார் என தெரிந்தால், உடனே முந்தியடித்து கொண்டு, சாலைவிதிகளை மீறி சீறிப்பாய தான் முயல்வார்கள். வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்ய வேண்டிய கடமையில் இருப்பவர்கள் டிராபிக் போலீசார்.சமீபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த டிராபிக் போலீஸ் ஒருவர் அபிட்ஸ் சாலையில் இருந்து கோட்டி சாலை வரை ஏறத்தாழ 2 கி.மீ தூரம், நெரிசல் மிகுந்த சாலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவகுக்க ஓடி சென்றுள்ளார். இந்த சம்பவம் சார்ந்த வீடியோ கடந்த புதன் (04-11-2020) அன்று வைரலாக நெட்டில் பரவியது.
வீடியோவில் பதிவாகி இருந்த அந்த டிராபிக் போலீஸ் பெயர் பாப்ஜி என்று அறியப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த திங்கள் (02-11-2020) அன்று அபிட்ஸ் ஜிபிஓ சிக்னல் அருகே நடந்துள்ளது. பொதுவாகவே அபிட்ஸ் சாலை முதல் கோட்டி சாலை வரை வாகன நெரிசல் மிகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. #viralvideo

Category

🗞
News

Recommended