• 5 years ago
குற்றவாளி தற்போது இந்தியானாவின் டெர்ரே ஹாட்டில் உள்ள பெடரல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தூக்கிலிடப்படும் இரண்டாவது குற்றவாளியும் அதே சிறைச்சாலையில் உள்ளார்.ஒரு மிசோரி பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்திற்காக அமெரிக்காவின் மத்திய அரசு ஒரு பெண்ணிற்கு மரண தண்டனையை அளித்துள்ளது. 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்த டிசம்பரில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்காவில் பல மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குற்றவாளிகளுக்கான தண்டனை தேதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
லிசா மாண்ட்கோமெரி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி மரண ஊசி போடப்படும் என உள்ளூர் ஊடக சேனல்கள் தெரிவித்தன.

Category

🗞
News

Recommended