Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2020
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்து முருகன் என்ற விவசாயி விதிவிலக்குதான். அவர், குளத்துப் பாளையத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதை நன்கு உணர்ந்த முத்து முருகன், பறவைகளுக்கு உணவளிப்பதற்காக, அரை ஏக்கரில் கம்பு மற்றும் சோளம் பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து, குருவிகள், கிளிகள் மற்றும் மயில்கள் என 100-க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு அட்சய பாத்திரமாக உணவளித்து வருகின்றன.


Producer - R.GuruPrasad
Video - T.Vijay
Edit - Senthil
Executive Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended