Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2020
#Madithottam #TerraceGarden #PasumaiVikatan

`விவசாயம் செய்ய நிலமில்லையே...’ எனக் கவலைப்படும் பலருக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது வீட்டுத் தோட்டம். அதிலும் மாடித்தோட்டம் பலரை நவீன விவசாயிகளாகவே மாற்றியிருக்கிறது. நஞ்சில்லா காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்து உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது; மனமும் மகிழ்ச்சியடைகிறது. இதனால் அண்மைக் காலமாக மாடித்தோட்டம் அமைப்பது அதிகரித்துவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆர்வத்தோடு மாடித்தோட்டம் அமைத்து வருகிறார்கள் பலர். அந்த வரிசையில், சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மைத்ரேயன், தன் வீட்டில் மாடித்தோட்டத்தைச் சிறப்பாக அமைத்து, ஆர்வமுள்ள பலருக்கும் மாடித்தோட்டம் அமைக்க வழிகாட்டிவருகிறார். ஒரு காலை வேளையில் மைத்ரேயனைச் சந்தித்துப் பேசினோம்.

ஒருங்கிணைப்பு - கு.ஆனந்தராஜ்
வீடியோ : சொ.பாலசுப்ரமணியன்
எடிட்டிங் : கு.மோகனலட்சுமி

Category

📺
TV

Recommended