சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணம் செய்த சோஃபியா என்ற மாணவி, தமிழிசை சவுந்தரராஜனை நோக்கி, பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டார். இதுதொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில், மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டு, 15நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் சோஃபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது
Category
🗞
News