அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு மதிப்பெண் மற்றும் பண ஆசை காட்டி படுக்கைக்கு அழைத்தது யாருக்காக என்று கல்வியாளர்கள் தோண்டித் துருவத் தொடங்கியுள்ளனர். ஆடியோ பேச்சில் தனக்கு உயர்அதிகாரிகளின் செல்வாக்கு இருக்கிறது, தான் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நிர்மலா ஆணித்தரமாக பேசுவதற்கு காரணமான அந்த முக்கியப்புள்ளி யார் என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் இயங்கி வரும் அந்தத் தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ பேச்சு வைரலாகியுள்ளது. வீட்டில் பெற்றோர் இருக்கின்றனரா, 4 பேரும் ஸ்பீக்கர் போட்டு என்னுடைய பேச்சை கேளுங்கள் என்று நிர்மலா மாணவிகளிடம் ஆசை வலை விரித்துள்ளார்.
For Whom Professor Nirmala devi lures 4 college students that an “opportunity” has come for doing certain things “secretly” for a very senior official of the Madurai Kamaraj University to which the college is affiliated.
Category
🗞
News