Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/27/2018
அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதனிடையே படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் காமெடி நடிகர்களாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ஏற்கெனவே கமிட்டானதை தொடர்ந்து படக்குழுவினர் ரோபோ ஷங்கரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரோபோ ஷங்கரும் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாகத் தெரிந்துவிடும். விசுவாசம் படத்தில் அஜித்-சிவா நான்காவது முறையாக கூட்டணி அமைக்க, நயன்தாரா நாயகியாகவும், டி.இமான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் டி.இமான் 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அஜித் படத்தில் இசையமைக்கவேண்டும் என்கிற அவரது ஆசை இப்படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


The shooting of Ajith's 'Viswasam' will begin in March. Yogi Babu and Thambi Ramaiyya will acts as the comedy actors of this film are said to have approached robo shankar.

Recommended