Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/20/2018
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற கிராமம் பாலமேடு. இங்கு கடந்த ஜன-15 மாட்டுப் பொங்கலன்று அமர்க்களமாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (19) என்ற இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். இறுதிச் சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க வெள்ளி நாணயங்களைப் பரிசாகத் தந்த உபயதார்களோ அவரது உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூட செய்து தர முன்வரவில்லை. அவர் உடலை போஸ்ட்மாடர்ம் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு சில அரசு மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்ட அவலமும் நடந்தது.


Actor Abhi Saravanan has adopted 10 years old girl who lost her brother in recently held Palamedu Jallikkattu, as his sister.

Category

🗞
News

Recommended