Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/19/2018
தமிழ் தேசிய கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் இடையே பங்காளிச் சண்டை தான் நடக்கிறது. இதையே காரணமாக வைத்து உள்ளே வர நினைத்தால் மண்டை உடைந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சீமான் பேசியதாவது : அதிகாரத் திமிறில் தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இன்னும் வீரியமாக நடக்கிறது. நான் சொல்கிறேன் ராஜா அதிமுக, திமுக முடிந்து விட்டது என்று கருதுகிறீர்கள். இதையே காரணமாக வைத்து உள்ளே வந்து விடலாம் என்று கனவிலும் நினைக்காதீர்கள். கருப்பண்ண சாமிஇ ஐயனார் சாமி கையில் இருப்பதை விட பெரிய அரிவாளை வைத்துக் கொண்டு நிற்போம் நாங்கள்.

திராவிடக் கட்சிகளுக்கும், தமிழ் தேசியம் பேசும் எங்களுக்கும் நடப்பது பங்காளிச் சண்டை. 50 ஆண்டுகளாக நாட்டை கொடுத்தோம் நாட்டை நாசமாக்கிவிட்டார்களே என்ற சண்டை

Seeman says the fight between Dravidian politics and Tamizh Desiyam is like fight in between family but by this chance there is no way to BJP to enter into the state.

Category

🗞
News

Recommended