• 6 years ago
ஓல்ட் மங் ரம் மதுபானத்தை உருவாக்கிய மாஜி பிரிகேடியர் கபில் மோகன் திரைமறைவில் இந்திய அரசியலின் பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறார். பிரிகேடியர் (ஓய்வு) கபில் மோகன் கடந்த சனிக்கிழமையன்று உ.பி.யின் காசியாபாத்தில் காலமானார். அவரது மறைவுச் செய்தி ஊடகங்களில் தாமதமாகவே பதிவாகி வருகிறது. கபில் மோகன் ஒரு தொழிலதிபர் என்பது நாடறிந்த உண்மை. 2010-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. கபில் மோகன் ஒரு தொழிலதிபர் மட்டும்தானா? 'நெவர்' என பதில் சொல்கிறது இந்திய அரசியலில் எழுதப்படாத பக்கங்கள்.

ஏனெனில் அந்த எழுதப்படாத பக்கங்களின் சாட்சியாக, பங்குதாரராகவும் இருந்திருக்கிறார் கபில் மோகன். 1970களில் இந்திய அரசியலில் பெரும் புயலே வீசியது. இந்தியாவின் கறுப்பு பக்கமாக அவசர நிலை அமலுக்கு வந்தது, இதனால் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பறிகொடுக்க பல கட்சிகள் இணைந்த ஜனதா அரசு உருவானது.

Kapil Mohan, chairman of Mohan Meakin, the maker of Old Monk rum had linke with Indian Political storms during Indira Gandhi Period.

Category

🗞
News

Recommended