• 6 years ago
தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனிடம் இருந்த இந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011- 16 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டசபையின் அவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் அந்த பதவி ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்கப்பட்டது. பின்னர் சசிகலா ஆதரவாளரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர்இ இதுவரை இரு கூட்டத்தொடர்களை நடத்தியுள்ளார். இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டு நிலையில் செங்கோட்டையனிடம் இருந்த அவை முன்னவர் பதவி தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை வரும் 8-ஆம் தேதி கூடும் நிலையில் இதுபோன்ற நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Deputy CM O.Panneer selvam is appointed as Leader of the Assembly. After ADMK Merger, OPS is getting more importance.

Category

🗞
News

Recommended