Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/30/2017
கஷ்டங்கள் எல்லாம் ஒரு காலக்கட்டத்தில் மறைந்து சந்தோஷம் பிறக்கும் என்று கூறுவார்கள்... ஆனால் என் வாழ்க்கையில் அப்படி எல்லாம் இல்லை.. என் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் இந்த காதலும், திருமணமும் தான்...! எனக்கு பள்ளி பருவத்திலேயே ஒரு காதல் இருந்தது..! காதலர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க கூடிய காதலாக தான் எங்களது காதல் இருந்தது..! அந்த இளம் பருவத்திலேயே காதலில் இணைந்த நான் சரியாக படிக்கவில்லை...! கல்லூரிக்கு என் பெற்றோர்கள் நிறைய பணம் செலவழித்து என்னை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். ஆனால் நான் அவர்களது கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டு நன்றாக படிக்கவில்லை.. ஏதோ ஒரு அளவுக்கு அரியர்கள் இல்லாமல் வெளியே வந்தது தான் மிச்சம்...! மற்றபடி காதல்... காதல்.. என்று தான் சுற்றிக் கொண்டிருந்தேன்...! ஆனால் அந்த காதலும் எனக்கு நிலைக்கவில்லை.. என்னை விட அளகான பெண் கிடைத்ததால் எனது 8 வருட காதலை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டான் அவன்...! காலம் முழுவது என்னுடன் வருவான் என்று நினைத்து தான் அவனிடம் என்னை ஒப்படைத்தேன்..! ஆனால் அவனோ என்னை பயன்படுத்தி விட்டு, பழையது ஆனால் தூக்கி எறிந்து விடும் ஒரு செருப்பை போல தான் உபயோகப்படுத்தி இருக்கிறான் என்பது எனக்கு காலங்கள் கடந்த பின்பு தான் தெரிந்தது...!


Category

🗞
News

Recommended