• 7 years ago
இப்போது தமிழ் சினிமாவிலும் ஆன்லைன் ஆதிக்கம். யூ-ட்யூப் சேனல், வெப் சீரிஸ் எனக் கலக்கும் பலர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறார்கள். இந்நிலையில், எரும சாணி, மெட்ராஸ் சென்ட்ரல் யூ-ட்யூப் சேனல்களைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். யூ-ட்யூப் ரசிகர்களுக்கு எரும சாணி குழு பற்றித் தெரியும். நாட்டு நடப்புகளை காமெடி வீடியோவாக்கி அலற விட்டுக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இப்போது சினிமாவுக்கு வருகிறார்கள். எரும சாணி குழுவில் உள்ள விஜய், ஹரிஜா, விக்கி, 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர், டெம்பிள் மங்கீஸ் ஷாரா, அகஸ்டின் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த யூ-ட்யூப் சேனல்களில் உள்ளவர்கள் இணைந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்தை உருவாக்குகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனின் புகழ்பெற்ற வாசகம் இது. ஏற்கெனவே, இந்த வசனத்தை வைத்து 'மெட்ராஸ் சென்ட்ரல்' குழுவினர் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


The actors from you tube channels, including Madras Central and eruma saani, are in the process of acting in a film 'Odavum mudiyaadhu oliyavum mudiyaadhu'. The shooting of this film is going to start soon.

Recommended