• 8 years ago
சசிகலாவின் உறவினர்களான விவேக், திவாகரன் உள்ளிட்டோர் வீடுகள் உள்பட 190 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன், தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியிலும், அதன் ஊழியர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. தஞ்சாவூரில் சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. சசிகலாவின் தம்பி வினோதகனின் மகன் மகாதேவன் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது. மகாதேவன் உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.

IT raids in 20 places including Jaya TV, Jazz cinemas, Namadhu MGR in alleging tax evasion.

Category

🗞
News

Recommended