• 8 years ago
டுவிட்டர் பக்கத்திலேயே கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுகத்துக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.அதற்கு பதிலடியாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் சில கருத்துகளை தெரிவித்து வந்தார். அதிலும் கமல்ஹாசனுக்கு சவால் விடும் தொனியில் பேசியவர் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக தெரிவித்த கமல்ஹாசனை, அரசியல் என்பது முள்படுக்கை போன்றது, அதற்குள் வந்தால்தான் உண்மை தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

Actor Kamal hassan visited Ennore port turst and Sambalkulam areas and enquire the people. This was the first time he visited people for their interests.

Category

🗞
News

Recommended