• 9 years ago
TAMIL MEDIA HOUSE - TAMIL EELAM
https://www.youtube.com/c/tamilmediahouse
https://www.facebook.com/tamilmediahouseproduction

அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை
இதை நீ மறக்காதே.

தலைவர்க்குத் துணையாக வேண்டும்
தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்
மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்

அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

ஈழத்தான் வீழத்தான் பொறுப்பானான்
தாகத்தான் சாகத்தான் மறுப்பானான்
தம்பியை போர்க்களம் அனுப்பி வையம்மா
தங்கையையும் போர்க்களம் அனுப்பி வையம்மா

அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

ஈனத்தான் ஆளத்தான் பொறுப்பானான்
மானத்தான் மடியத்தான் மறுப்பானான்
தந்தையை போர்க்களம் அனுப்பி வையம்மா
அன்னையே பெண்புலி நீயும் தானம்மா

அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை
இதை நீ மறக்காதே

தலைவர்க்குத் துணையாக வேண்டும்
தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்
மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்

அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே...

பால் கொடுத்த தாயே பாசக்குடை விரித்த தாயே
ஈழத்தாய் பிறக்க நானும் ரத்தப்பால் கொடுத்தேன் தாயே...
ஈழத்தாய் பிறக்க நானும் ரத்தப்பால் கொடுத்தேன் தாயே...

Category

🎵
Music

Recommended